பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
Share

தலைமறைவாக உள்ள பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவரான நிரோஷன் பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவரான பிரபல பாதாள குழு உறுப்பினர் தெவுன்தர சமில் என்பவருடைய பெயரில் இருந்த 40 கோடி மதிக்கத்தக்க சொத்தும், 40 இலட்சம் பணம் முதலிடப்பட்டிருந்து வங்கி கணக்கு புத்தகமும் 20 க்கும் அதிகமான வங்கி அட்டைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (40 crore property found)
தலைமறைவாக உள்ள பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவரான நிரோஷன் பல்லியகுருகே மற்றும் அவருடைய கள்ள மனைவியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இவர்களிடம் இருந்து 2 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வாக்குமூலத்தின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நிரோஷன் பல்லியகுருகேயின் கள்ள மனையிவின் கணவரான பிரபல பாதாள குழு உறுப்பினர் தெவுன்தர சமில் என்பவருடைய பெயரில் இருந்த 40 கோடி மதிக்கத்தக்க சொத்தும், 40 இலட்சம் பணம் முதலிடப்பட்டிருந்து வங்கி கணக்கு புத்தகமும் 20 க்கும் அதிகமான வங்கி அட்டைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவர்களை 7 நாள் சிறையில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:40 crore property found,40 crore property found,40 crore property found,