Type to search

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் விபத்து : 3 பேர் பலி

Breaking News Hot News NEWS Sri Lanka Top Story Trending News

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் விபத்து : 3 பேர் பலி

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மஹா” அதி சொகுசு பஸ் வண்டியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வந்த வேன் ஒன்றும் நேற்று (26) இரவு 11 மணியளவில் கிரான், இலங்கை வங்கி (BOC) கிளைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியதில் ஸ்தலத்திலேயே வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த வேனின் சாரதி நொச்சிமுனை விபுலானந்த வீதியைச் சேர்ந்த பா.வினோஜன் (வயது 25) என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமுற்ற பயணிகளை பிரதேச வாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போதைக்கு ஐந்துக்கும் ​மேற்பட்டோர் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:kattankudy colombo bus accident 3 dead,kattankudy colombo bus accident 3 dead,kattankudy colombo bus accident 3 dead,


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: