Type to search

ராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்

INDIA WORLD

ராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

(woman France left Jaipur Pushkar holy place Rajasthan gone missing)

ராஜஸ்தான் மாநிலத்தின் புனிதத் தலமான புஷ்கருக்கு விஜயம் சென்றுவிட்டு ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து புஷ்கர் பொலிஸ் நிலைய அதிகாரி மஹாவீ ர் ஷர்மா கூறுகையில்,

காணாமல் போன பிரான்ஸ் பெண்ணின் பெயர் கால்லே சவுடியு என்பதாகும்.

இவர் கடந்த மே 30 ஆம் திகதியன்று அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகருக்கு சென்றுள்ளார்.

கடந்த ஜூன் முதலாம் திகதியன்று புஷ்கரில் அவர் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

ஆனால், அதன் பிறகு குறித்த பெண் எந்த பேருந்தில் ஏறினார். எந்த திசையில் சென்றார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்க புஷ்கர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டவர் காணாமல் போனது தொடர்பாக பிரான்ஸ் தூதரகத்தின் ஓர் உயரதிகாரிக்கு செவ்வாய்க்கிழமையன்று மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டது.

அவர் தங்கியிருந்த புஷ்கரில் உள்ள விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

அந்த பெண் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்வதை மட்டும் காணமுடிந்தது.

அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது புலப்படவிடல்லை.

அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அனுப்பட்டுள்ளன.

இங்கிருந்துதான் அவர் புஷ்கருக்கு வந்து சேர்ந்தார்.

புஷ்கரிலிருந்து அவர் மீண்டும் ஜெய்ப்பூருக்கு சென்றிருக்கக் கூடும்.

அதனால் எங்கள் பொலிஸ் குழுக்களை அஜ்மீர், புஷ்கர் மற்றும் ஜெய்பூருக்கு அனுப்பியுள்ளோம். அந்தப் பெண்ணைப் பற்றி உரிய தகவல்களை பெறுவதற்காக அஜ்மீரிலும் புஷ்கரிலும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பெற்று அதை பரிசோதிக்கும்படி கூறியுள்ளோம்.

அவரது செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னொரு பக்கம் தொழில்நுட்ப ரீதியான புலனாய்வும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே சீக்லெர் காணாமல் போன பெண்ணின் படத்தை நேற்று தனது ட்வீட்டரில் வெளியிட்டு அவரைப் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

அப்பெண்ணின் இடத்தைக் கண்டறிய உதவும்படி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக அப்பெண்ணின் நண்பர்களுக்கும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புஷ்கர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

(woman France left Jaipur Pushkar holy place Rajasthan gone missing)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: