Type to search

பசறையில் இன்று அதிகாலை நடந்த கொடூரம் : தாய், மகள், சின்னம்மா ஆகியோர் பலி

Breaking News Hot News NEWS Trending News

பசறையில் இன்று அதிகாலை நடந்த கொடூரம் : தாய், மகள், சின்னம்மா ஆகியோர் பலி

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

பதுளை, பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மூன்று பெண்கள் தீயில் கருகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.(Fire erupts badulla passara shop three killed)

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதனுள் தங்கியிருந்த மூன்று பெண்களும் இதன்போது பலியாகியுள்ளனர்.

ஒரே ​குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், ஒன்றுவிட்ட உறவுக்காரப் பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு முயற்சி செய்துள்ளனர்.
குறித்த கடைக்கு அருகில் இருந்த மேலும் இரு கடைகளும் தீ விபத்துக்குள்ளாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பசறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: