Type to search

4 பிள்ளைகளின் தந்தை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

Breaking News Hot News NEWS Trending News

4 பிள்ளைகளின் தந்தை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில்தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.(4 children father died vavuniya maharambaikulam)

வவுனியா மகாறம்பைக்குளம் முலதாம் ஒழுங்கையில் வசித்து வரும் விஜிபாலன் என்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே நேற்றிரவு சிறு கருத்துமுரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது மனவேதனையடைந்த விஜிபாலன் (வயது-46) வீட்டிலிருந்து 5 மீற்றர்தொலைவில் காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே சென்றசமயத்தில் குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை , இரு ஆண்பிள்ளைகளின் தந்தையாவர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags: