Type to search

திருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்

Breaking News Hot News NEWS Trending News

திருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்

Share
  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    51
    Shares

காலியில் நடைபெற்ற திருமணம் ஒன்று, இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகுந்த வரவேற்பை பெற்ற திருமண நிகழ்வுகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. (ahungalla wedding function)

காலி, அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதானம் ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

திருமணத்தன்று மைதான அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு திருமண தம்பதிகள் வழங்களியுள்ளனர்.

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.திருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.

மக்களின் வாக்குகளை பெற்று அவர்களுக்கு எந்த நன்மைகளும் செய்யாமல் தனது புதல்வர்களுக்கு பல கோடி ரூபா செலவில் ஆடம்பரமாக கொண்டாட்டங்களை செய்யும் பல அரசியல்வாதிகளின் மத்தியில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    51
    Shares
Tags: