இலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது
Share

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka)
“இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை இலங்கையிலேயே அமைத்துள்ளனர்.
இதனால் தான்,தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக இலங்கையை தெரிவு செய்தோம். இந்த கிளை மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கும்.
மூலோபாய அமைவிடம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஏனைய கவரும் தன்மைகளால், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் இடமாக இலங்கை மாறும்.
கொழும்பில் எமது கிளையை திறக்கும், பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் முடிவில் அதுவும் செல்வாக்கு செலுத்தியது.” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சீனத் தூதரக, பொருளாதார விவகாரங்களுக்காக பணியகத்தின் அதிகாரியான, யா சூ யுவான், அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் மிக முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வளமாக சீனா மாறியுள்ளது.
சீனாவுக்கான ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை கவருதல் முக்கியமானது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து 270,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தனர். இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பாகும்.
கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்தளவு வீதத்தில் வளர்ந்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட- சீன வங்கி, வரும் ஜூலை மாதம், கொழும்பில் தனது கிளையை திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்
- யாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்
- ‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்
- நோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..!
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:62 companies invested Sri Lanka,62 companies invested Sri Lanka,62 companies invested Sri Lanka
-