Type to search

கண்டிக்கு பயணித்த பஸ்ஸில் ஆபாசத் திரைப்படம்; அதிர்ச்சிக்குள்ளான பயணிகள்

NEWS

கண்டிக்கு பயணித்த பஸ்ஸில் ஆபாசத் திரைப்படம்; அதிர்ச்சிக்குள்ளான பயணிகள்

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

மஹியங்கனையில் இருந்து கண்டி வரை பயணித்த தனியார் பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில், திடீரென பாலியல் காட்சிகள் தென்பட்டதால் குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். (Porn movie Kandy bus Shocked travelers)

அத்துடன், இந்தக் காட்சிகளினால் வயோதிபப் பெண் ஒருவர் அசௌகரியத்திற்கு உள்ளானதாகவும் அறியமுடிகின்றது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, உடனடியாக தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கவே, தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த பேரூந்து வண்டியின் சாரதி மற்றும் நடத்துநரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு மக்கள் தெரிவித்த முறைப்பாட்டின் பிரகாரம், மாகாண போக்குவரத்து அதிகார சபையின் இயக்குநர் அனுருத்த கல்பொத்தே கெதெரவின் அறிவுறுத்தலில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பஸ் வண்டி பயணங்களுக்கு தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த பஸ் வண்டியின் உரிமையாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கியிருப்பது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த பஸ் வண்டியில் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களே அதிகளவில் பயணிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் இயக்குநர் என்.பீ.ஏ.எஸ். நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Porn movie Kandy bus Shocked travelers


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: