ஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது?
Share

செனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie
அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன்.
இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ஒளிபரப்பியதால் கண்டனத்தை சம்பாதித்துள்ளது அத்தொலைக்காட்சி.
இவ்வாரம் நண்பகல் ஒளிபரப்பிய திரைப்படமொன்றின் போது 12.45 மணியளவில் ஆபாசக் காட்சியொன்று காட்டப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த பலரும் அதிர்ந்துதான் போயுள்ளனர். எனினும் அக்காட்சி அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சேவையின் விதிமுறைகளை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இத்தகைய காட்சிகள் பாடசாலை நாட்களின் போது நண்பகல் 12 முதல் 3 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரமே ஒளிபரப்பப்பட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது? appeared first on TAMIL NEWS.