Type to search

செயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை

NEWS

செயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனையில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு புறக்கோட்டை மெனின் சந்தை பொது வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது. (pettah manning market General Business Association sudden decision)

இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பப்பாளி, வாழை, மாங்காய் உள்ளடங்க பல்வேறு பழவகைகள் புறக்கோட்டை மெனின் வியாபார நிலையத்திற்கு தினமும் கிடைக்கின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களைத் தடை செய்ய அரசிடம் கோருவதாக மெனின் சந்தை வியாபார சங்கத்தின் பொருளாளர் எம்.கே. உபசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பழங்களைப் பழுக்க வைப்பது மொத்த விற்பனை வியாபாரிகள் எனவும், இவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களைத் தடை செய்தால் தரமான, இயற்கையான பழ வகைகளை பொது மக்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பழங்களைப் பழுக்க பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அரசினால் அனுமதி வழங்கப்பட்டவை என அதிகாரிகள் கூறினாலும், பழங்களை பழுக்க வைக்கும் இடங்களில் பயன்படுத்துவது எந்த இரசாயன பொருட்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனைகள் நடத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; pettah manning market General Business Association sudden decision


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: