Type to search

சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்

Hot News NEWS Top Story Trending News

சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்

Share
  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    200
    Shares

தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue)

வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது.

இம்முறை திருவிழா ஏற்பாடுகள் நடந்தபோதும், தேர் இழுப்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தேர் இழுக்ககூடாது என்பதில் ஆலய நிர்வாகம் விடாப்பிடியாக நின்றது.

எனினும், ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த “நவீன ஏற்பாட்டில்“ தேர் இழுக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. நவீன சமூகத்தில் இப்படி பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கிறார்களே என அதில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:jaffna thenmaradchi parani kovil JCP issue,jaffna thenmaradchi parani kovil JCP issue,jaffna thenmaradchi parani kovil JCP issue,


  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    200
    Shares
Tags: