Type to search

பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்

Hot News NEWS Top Story Trending News

பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்

Share
  • 134
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    134
    Shares

திருமணம் நடக்க இருக்கும் சொற்ப நேரத்தில் மணமகனை ஏமாற்றிவிட்டு மணமகள் காதலனுடன் தப்பிச் செல்லும் காட்சிகளை சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம்.(balangoda bride elopes)

ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவம் பலாங்கொடை பகுதியிலும் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பலாங்கொடை பகுதியில் திருமண நிகழ்வொன்று மிகவும் கோலாகலமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மணமகன் மணமேடையில் அமர்ந்திருக்கும் போது மணமகளும் அங்கு வந்துள்ளார்.

திடீரென மணமகள், தனது பையை காரினுள் மறந்து வைத்து வந்து விட்டேன். அவசரமாக தேவைப்படுகின்றது. உடனே எடுத்து வருகின்றேன் என மணமேடையில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

இதன்போது திருமணம் நடைபெற்ற மண்டபத்துக்கு வெளியில் மோட்டார் சைக்களில் இளைஞன் ஒருவர் வந்து நின்றுள்ளார்.

பையை எடுக்கச் சென்ற மணப்பெண் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார்.

மணப்பெண்ணை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்று திருமண மண்டபத்தில் இருந்து மிகவும் வேகமாக செல்வதை அங்கிருந்த மக்கள் அவதானித்துள்ளனர்.

மணமகனை குழப்புவதற்காக தான் இவ்வாறு செய்கின்றார்கள் என பொதுமக்கள் எண்ணியுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் திரும்பி வரவில்லை.

சிறிது நேரத்தில் பெண்ணின் உறவினரின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

‘நான் எனது காதலனோடு தப்பி வந்துள்ளேன். நான் தற்போது ஹப்புத்தளையில் உள்ளேன். என்னை தேட வேண்டாம். நாங்கள் திருமணம் செய்துகொள்ள போகின்றோம்” என குறுந்தகவல் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருமணம் தடைப்பட்டுள்ளது. மேலும் மணமகன் போதைக்கு அடிமையானவர் என இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மணமகனை தேடி கொடுத்த தரகரை மணப்பெண் வீட்டார் தாக்கியுள்ளனர்.

காதலனுடன் தப்பியோடிய மணப்பெண், குறித்த இளைஞனை தனது பாடசாலை காலம் முதல் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனக்கு பார்த்த நபரை பிடிக்கவில்லை எனவும் திருமணம் செய்துகொள்ள முன்னர் தன்னை காப்பாற்றுமாறும் குறித்த இளைஞனுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே திருமண நாளன்று இளைஞன் அங்கு வந்து காதலியை கூட்டிச் சென்றுள்ளார்.

 

தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்

சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:balangoda bride elopes,balangoda bride elopes,balangoda bride elopes


  • 134
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    134
    Shares
Tags: