Type to search

மகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை

NEWS

மகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை

Share
  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares

ஜாஎல பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடத்தில் நடத்தப்பட்டுவந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தைச் சுற்றிவளைத்து, முன்னாள் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் 41 வயது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (Abortion station siege)

மேலும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்கு உபயோகித்த உபகரணங்களையும் பாணந்துறை வலான குற்றத்தடுப்பு சோதனை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் மனைவியும், அவரின் மகனும் சட்டத்திற்கு எதிரான கருக்கலைப்பு மேற்கொண்டு வருவதாக பாணந்துறை வலான குற்றத்தடுப்பு சோதனை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இவ்வாறு சட்டவிரோத கருக்கலைப்பிற்காக அவர்கள் விரும்பியவாறு வேறு வேறாக பணம் அறவிடுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, இந்த ஆயுர் வேத நிலையத்திற்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் தங்களின் கள்ளத் தொடர்ப்பினால் கருவுற்றுள்ளதாக நடித்துள்ளனர்.

இதன்போது கருக்கலைப்பு நிலையத்தை நடத்தும் பெண் 45,000 ரூபா செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு இவர்கள் சம்மதிக்கவே இவர்களை வைத்தியர் எனக் கூறும் தனது மகனின் அறைக்கு பொலிஸ் கான்ஸ்டபிளை அழைத்துச் சென்ற போது, பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த வைத்திய நிலையம் ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலியான இந்த வைத்தியருக்கு எதிராக, சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் நடத்திய குற்றத்திற்காக 6 வழக்குகளுக்கான விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Abortion station siege


  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares
Tags: