Type to search

மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

NEWS

மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

தமிழகம் – தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. (Thoothukudi massacre protest demonstration Jaffna)

சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ் நாட்டு அரசே நீதி கேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டணை என்ன, தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு, மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்டனை என்ன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஈழத் தமிழர்களால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Thoothukudi massacre protest demonstration Jaffna


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: