Type to search

ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை

NEWS

ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள பத்திரிகை ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. (Journalists Attacked Call Sinhala newspaper editor)

2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் 2010 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நாடு திரும்பிய போத்தல ஜெயந்த, தாம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் போத்தல ஜெயந்த குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Journalists Attacked Call Sinhala newspaper editor


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like