Type to search

ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

NEWS

ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

மூத்த ஊடகவியலாளரும், நாட்டுப் பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆம் ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. (Journalist Nadesan 14th Memorial Day Jaffna)

யாழ். நகரிலுள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபியடியில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரட்ணம் தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐயாத்துரை நடேசனின் நெருங்கிய உறவினருமான க.சுகாஷ் ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவுச் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். ஊடக அமையத் தலைவர் ஆறுமுகம் சபேஸ்வரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் ஐயாத்துரை நடேசன் நினைவாக நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐயாத்துரை நடேசனின் நெருங்கிய உறவினருமான க.சுகாஷ், யாழ். ஊடக அமையத் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ரட்ணம் தயாபரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மலர் தூவி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர். நினைவுரையை சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் நிகழ்த்தினார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐயாத்துரை நடேசன் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்திற்கு ஊடகப் பணி நிமித்தம் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Journalist Nadesan 14th Memorial Day Jaffna


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: