Type to search

ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த

NEWS

ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

ஜனாதிபதியாக தான் பதவி வகிக்கும் காலத்திலேயே ஹெலிகொப்டரில் பயணித்ததாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (Helicopter dispute Maithri Mahinda clash)

மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அனுமதியின்றி ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் பதலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

தான் ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டிருந்த போதே கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் பயணித்தாகக் குறிப்பிட்ட அவர்,

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே தான் கொழும்பில் இருந்து பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் தானே தான் அப்பதவியில் இருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Helicopter dispute Maithri Mahinda clash


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like