Type to search

போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்

NEWS

போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

பண்டாரகமை, ரைகம பிரதேசத்தில் பலகை மேம்படுத்தும் தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவர் சக தொழிலாளியின் மலவாய் பிரதேசத்தில் உயர் அழுத்த வாயு வெளியேறும் குழாயை பிடித்தமையினால் அந்த ஊழியர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். (incident happened Sri Lanka like pokkiri tamil movie)

சிகிச்சை பெற்றுவரும் 47 வயதான இந்த தொழிலாளி தொழிற்சாலையில் வேலை செய்யும் போது நகைச்சுவைக்காக உயர் அழுத்த வாயுவுடைய குழாயை மற்றவரின் பின்புறமாகப் பிடித்துள்ளார்.

உடனே அந்த குழாயை அவரிடம் இருந்து பிடுங்கி எடுத்து, காயமுற்றவரின் மல வாய் பிரதேசத்தில் உயர் வாயு அழுத்த குழாயில் வாயு வெளியேறும் பகுதியை பிடித்துள்ளதாக இத் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த தொழிலாளியின் வயிற்றில் காற்று நிரப்பப்பட்டுள்ளதோடு, மயக்கமுற்றுள்ளார். உடனே இவரை ஹொறணை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 28 வயதான சந்தேக நபரை கைதுசெய்து ஹொறணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதன்போது, சந்தேக நபரை 25,000 ரூபா சரீர பிணை இரண்டில் விடுதலை செய்துள்ளதுடன், சிகிச்சைக்காக 25,000 ரூபா காயமடைந்தவருக்கு செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; incident happened Sri Lanka like pokkiri tamil movie


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: