Type to search

பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்

Hot News NEWS Top Story

பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

(homagama hospital incident)
உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவர் பிணவறைக்கு கொண்டுச் செல்லும் போது உயிர்த்தெழுந்த சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

ஹோமாகம மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியர்கள் குறித்த பெண்ணை பரிசோதித்தன் பின்னர் தாதி ஒருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.
இதனையடுத்து குறித்தப் பெண் மயக்கமுற்றுள்ளார்.

எனினும் பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெண்ணின் இறுதி சடங்கு நிகழ்வுகளை மேற்கொள்ள உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக வைத்தியசாலையில் நபர் ஒருவர் உயிரிழந்த பின்னர், ஒரு மணித்தியாலம் வரையில் நோயாளியின் சடலம் வைத்தியசாலையின் நோயாளர் வார்ட் அறையில் வைக்கப்படுவது வழமையானதாகும்.

இவ்வாறு குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை பெண்ணின் உறவினர் ஒருவர் அவதானித்துள்ளார்.

பெண்ணிற்கு உயிர் உள்ளது. பிரேத அறைக்கு கொண்டுச் செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
அதன்பின்னர் பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :