Type to search

தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது

Hot News NEWS Top Story

தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது

Share
  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    54
    Shares

(deniyaya viharahena incident cctv)
தெனியாய – விஹாரஹேன பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, 13 வாகனங்களில் வந்த 35 பேர், வர்த்தக நிலைய உயரிமையாளரை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான நபர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளவர் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை காப்பாற்ற சென்ற இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்கள் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாரவக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் முரண்பாடு காரணமாக இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர் கருத்து தெரிவிக்கையில்,

விஹாரஹேன மற்றும் சுற்றுப் புறத்திலிருந்து 2018 05 27 ஆம் திகதி பகல் எனது வியாபார நிலையத்துக்கு வந்த குண்டர்கள் என்னையும் என்னை காப்பாற்ற வந்த எனது நண்பன் ஒருவரையும், அவரின் தந்தையையும், எனது சகோதரனையும் தாக்கிவிட்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று இன்று நான் நீதிமன்றுக்கு சென்றேன்.
தாக்கியவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் திட்டமிட்டு என்னை தாக்க வந்த மற்றவர்கள் இன்னும் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாகி உள்ளனர்.

வாகன விபத்தொன்றில் சிக்கி எனது ஊனமடைந்துள்ளது. இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தான் குணமடைந்து வந்தேன்.

இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலால் எனது மீண்டும் ஊனமடைந்துள்ளது என்றார்.

இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :


  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    54
    Shares
Tags: